Friday, February 25, 2011

மம்தா பட்ஜெட்

நேற்று பரபரப்பான பாராளுமன்ற அமளிகளுக்கு இடையே மம்தா பானர்ஜி தனது மூன்றாவது ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.இதில் ரயில்வே வருமானத்தை பெருக்கும் வழிகள் இல்லை.தொலைநோக்குப்பார்வைகள் இல்லை என்ற குறைகள் சொல்லப்படுகின்றன என்றாலும் பெரும்பாலானோர் கூறும் குற்றச்சாட்டு இது மேற்குவங்க தேர்தல்அறிக்கை போல் இருக்கிறது என்பதே, இதில் என்ன தப்பு இருக்குது முடி அதிகமா இருக்குறவன் அள்ளி முடியுறான்.ஏன் போன அமைச்சரா இருந்த லாலு அப்புடி என்னா மத்தமாநிலங்களுக்கும் சேர்த்து தேசிய கண்ணோட்டத்தோட பட்ஜெட் போட்டுட்டாரு.இத்தனைக்கும் அப்போ ரயில்வே இணையமச்சரா நம்மவர் வேலு தான் இருந்தார்.அவராலயே தமிழ்நாட்டுக்கு ஒன்னும் பெருசா திட்டங்களைக்கொண்டு வர முடியலயே.மூணு அமைச்சரவைகள்ள பங்கெடுத்த (BJP கவர்ன்மெண்ட் சேர்த்து) தி.மு.க ரயில்வே அமைச்சரவையை ஒரு தடவ கூடக் கேட்கவே இல்லேயே? இவுங்களுக்கே இல்லாத அக்கறை மே.வங்க மம்தாவுக்கு ஏன் இருக்கப்போகுது? மத்திய அரசு தமிழ்நாட்டுக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல தேர்தல் வரப்போகுதே தமிழனுகளுக்கு ஏதும் பண்ணாத்தான் நமக்கு ஓட்டுப் போடுவாணுகன்னுங்குற நெனப்பே இல்ல,MR.சிங்குக்குத்தெரியாதா தமிழனுகளுக்கு நிரந்தர பொருளாதார வளர்ச்சிய விட தேர்தலன்னைக்கு கிடைக்கிற1000ருபாயும்.டாஸ்மாக் சரக்கு,மற்றும் டீவி தான் முக்கியம் தான்னு.இது பிரணாப்புக்கும் தெரியும் அதை அவர் தன்னோட பொதுபட்ஜெட்டுல வெளிப்படுத்துவார்.

சர்வாதிகாரத்தைத் தகர்க்கும் சிட்டுக்குருவி

கடந்த சில மாதங்களாகவே மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் மக்களிடம் சர்வாதிகாரத்திற்கு எதிரான மனப்போக்கு வேரூன்றி அவர்களை அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.இதில் துனீசியா, எகிப்திய மக்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.இப்போது லிபியாவிலும் மக்கள் புரட்சி ஆரம்பமாகியுள்ளது.அவர்களின் முயற்சி வெற்றிபெறுவதாக.சவூதி அரசு மக்கள் புரட்சி வெடிக்காமல் இருக்க அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு போன்ற சலுகைகளைக் கொடுத்து தாஜா செய்ய ஆரம்பித்துள்ளது.அல்ஜீரிய அரசாங்கம் 19 ஆண்டுகளாக இருந்த அவசர ராணுவச்சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.சீன அரசாங்கம் கூகுள்.பேஸ்புக் ,ட்விட்டர் இணையதளங்களைத் தொடர்ந்து சமுக இணையதளமான லிங்டினை தடை செய்செய்துள்ளது .இந்த இணையதளங்கள் தான் புரட்சியை வழிநடத்தி செல்பவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்துள்ளன. ஆக மொத்தத்தில் சர்வாதிகாரிகளுக்கு உள்ளூற நடுக்கம் ஏற்படுத்தியதில் இந்த ட்விட்டர் சிட்டுக்குருவிக்கு பெரும் பங்கு உண்டு .

Thursday, February 24, 2011

ஜிங்சிக்கா

தமிழக மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றிக்கூட்டணி ஒருவழியாக அமைந்துவிட்டது அதாங்க குடிகாரரும், ,ஊத்திக்குடுத்தவரும் ஒன்னு சேரப்போறாங்கல்ல அதான்.(அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா)

நாம் தமிழர்களா?

நேற்று நடைபெற்ற பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தனித்தெலுங்கான குறித்த அமளிகாரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்டு அவை அலுவல்கள் ஏதும் நடைபெறவில்லை.அப்படி ஏதும் நடைபெற்று இருந்தால் தமிழக மீனவர் படுகொலை பற்றிய சூடான விவாதங்கள் நடைபெற்று இருக்க வாய்ப்புகள் உண்டு.ஏனென்றால் நேற்று இரண்டு லோக்சபா எம்பிக்கள் இது குறித்து தங்கள் கேள்விகளைக் கேட்க இருந்தனர். அவர்கள் தமிழகத்தின் திமுக,அதிமுக,காங்,மதிமுக.விசி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல ,ஏன் அவர்கள் தென்னகத்தையே சேர்ந்தவர்கள் அல்ல.அதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அவர்கள் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட பெறாத பாஜக கட்சியைச்சேர்ந்த குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிகள் தான் அவர்கள்.மீனவர் விவகாரம் இப்போதுதான் தமிழக அடையாழத்தைத்தாண்டி தேசிய முக்கியத்துவத்தைப் பெறத்துவங்கியுள்ளது.இந்த சமயத்தில் நாம் ஒட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த 39+1 எம்பிக்கள் தூங்கிட்டு இருப்பதப்பார்த்து சும்மா இருந்தா............................!!(இடுகைக்கான தலைப்பைப் படிக்கவும்)
செய்தி ஆதாரம்:DINAMALAR

Wednesday, February 23, 2011

பச்சையப்பாஸ் பஸ் டே

தற்போது சில வாரங்களாகவே பஸ்டே என்னும் வாசகம் பொதுமக்களால் வெறுப்புடன் உச்சரிக்கப்படுகிறது. இந்த பஸ்டே அல்லது பேருந்து தினம் என்றால் என்ன? இது ஒன்னும் பெரிய கம்பசூத்திரம் ஒன்னும் கெடையாது நம்ம மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம்ல அதே தாத்பரியம் தான்.அதாவது அமெரிக்காவோட THANKS GIVING DAY மாதிரி மாணவர்கள் வருசம் பூரா காலேஜிக்கு நல்லபடியா கூட்டிட்டு வற்ற பஸ்ஸுக்கும் டிரைவர் கண்டக்டர் மற்றும் சகபயணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு பேருந்தை நிர்வாகத்துடன் பேசி அவர்களின் அனுமதியுடன் அதை அலங்கரித்து சக பயணிகள்,மற்றும் பேருந்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதே .ஆனால் இங்கே நடப்பது என்ன?உயர்நீதிமன்றமே போலீஸை அழைத்துக்கண்டிக்கும்படியாக இவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் இந்த கூத்துக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெறிசல்.மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல மாநகரக்காவலர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து கண்டணக்குரல்களும் வருங்கால இந்தியாவின்தூண்களிடம் இருந்து கேலியும்தான் கிடைத்தது. ஆனால் நேற்று பச்சையப்பன் கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் உச்சகட்ட அசிங்கம்.பஸ்டே எழவைக் கொண்டாடிவிட்டு?பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலபேர் கல்லுரிக்குள் செல்ல மறுத்து போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளனர் காரணம் அவர்களை பஸ்ஸின் டாப்பின் மேல் நின்று ஆடவிட வில்லையாம்.இது அவர்களின் ஜீவாதார உரிமையாம் அவர்களை சமாதானப்படுத்தச்சென்ற பெண்காவல்துறை உயரதிகாரி(D.C.P) மதுபாட்டில்களால் தாக்கப்பட்டு மண்டையுடைக்கப்பட்டுள்ளார்.அவரைப்பாதுகாக்கச்சென்ற பெண் இன்ஸ்பெக்டரையும்,ஆண் காவலர்களையும் தாக்கியுள்ளனர்.அதன்பிறகும் போலீசார் பொறுமைகாத்து மிக லாவகமாக இந்த பிரச்சினையைக் கையாண்டுள்ளனர் ஏன்னா சென்னை உயர்நீதிமன்ற தாக்குதல் சம்பவம் இவர்களுக்கு அனுபவ பாடம் நடத்தியுள்ளது.தேர்தல்கள் நெருங்கி வரும் சமயத்தில் இந்த முன்னெச்சரிக்கை தேவைதான் ஆனா மாணவர்கள் அப்படிங்குற போர்வையில இவனுங்க செய்யிற அழிச்சாட்டியத்துக்கு அழவே இல்லையா. ஏழை வீட்டு புள்ளைக நல்லாபடிக்கனும்னு காலேஜூ கட்டிக்கொடுத்த பச்சையப்ப முதலியார் இவனுகளப்பாத்தா அவரே இந்த காலேஜ இடிச்சுப் போடுவாரு.சென்னையில டிராபிக்ஜாம் கிளியராக எவ்வளவு நேரமாகும்னு எனக்குத்தெரியும் ஆம்புலன்ஸுல சைரனோட போனாவே சாமானியத்துல போகமுடியாது.நடுவுல இவனுக வேற!இந்த லட்சணத்துல பொதுமக்கள் எங்களுக்காக பொருத்துக்கொள்வார்கள் அப்புடின்னு ஒரு சனியன் ஸ்டேட்மெண்ட் கொடுக்குது.இந்த அக்கிரமமெல்லாம் சிங்காரச்சென்னையிலதான் நடக்கும்!!

வல்லவரல்லாத ஒரு நல்லவர்?

ஒரு வழியாக நீநீண்ட... இழுபறிக்குப்பிறகு பாராளுமன்றக்கூட்டுக்குழுவிற்கு மத்திய அரசு சம்மதித்து உள்ளது.இதை மொதல்லையே செஞ்சு இருந்தா குளிர்காலக்கூட்டுத்தொடராவது ஏதோ ஒரளவுக்கு பரவாயில்லாம நடந்து இருக்க வாய்ப்பு இருக்கு.அது நடக்காமப்போனது இதுக்கு ஒரு வாக்காளன் என்ற முறையில என்னோட கண்டணத்த பதிவு செஞ்சுக்கிறேன்.ஆனால் ஒரு ஆளும்கட்சி எதிர்கட்சிகளோட கருத்த் கண்டுக்கிறாமயே இருந்தா அவங்களும் வேற என்னதான் செய்யமுடியும்.ஜே.பி.சி. ஒன்னும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரம் கிடையாது அதால சம்மன் அனுப்பி அதிகாரிகளையும்,அமைச்சர்களையும்(பிரதமர் உடபட) விசாரிக்கலாம்.ஆவணங்களைக் கொண்டுவரச்சொல்லாலாம்.அதற்குரிய பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு அனுப்பலாமே தவிர அதுக்கு யாரையும் தண்டிக்கிறதுக்கு அதிகாரம் கிடையாது.JPC பரிந்துரைகளை கட்டாயம் ஏத்துக்கிற அவசியமும் அரசுக்கு இல்ல.அப்படி இருக்கும் போது ஏன் இப்படி சப்பக் காரணங்களக் காரணம் காட்டி விசாரணையை தவிர்க்கணும் மடியில கனம் இல்லைன்னு காட்டிரவேண்டியதுதான?இந்த விசயத்துல மன்மோகன்சிங் மேல இருந்த மரியாதை எதிர்கட்சிகளுக்க மட்டுமில்ல எனக்கும் கொறஞ்சு போச்சு.2ஜி விவகாரத்துல தவறு நடக்காம பார்த்து இருந்து இருக்கணும் ,அப்படி இல்லீன்னா டீல் முடிஞ்சப்பறம் அதப்பத்தி தகவல் கசிஞ்சப்பறம் அது என்னா புகையுதுன்னு விசாரிக்கவாவது சொல்லி இருக்கனும்.அதுவும் இல்லாம திருடன் கையில கொத்துச்சாவியக் கொடுக்கிறமாதிரி இந்தாப்பா ராசான்னு மறுபடியும் ஏங்கையா அவுருக்கு டெலிகாமக்கொடுத்தீங்க? இப்படி எல்லாத்தப்பையும் அன்னையின் உத்தரவோட செஞ்சுபுட்டு எதிர்கட்சிகாரனும் மீடியாக்காரனும் கிழி கிழின்னு கிழிக்கறப்போ முண்டாச ரெண்டு காதுக்கும் சேர்த்துக்கட்டிப்புட்டு காதுகேட்காதமாரி ஒக்காந்துகிட்டு இருந்துட்டு பார்லிமெண்ட்டுல வந்து 2ஜி விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்த ஒன்று அப்படின்னு சொன்னா மனுசனுக்கு கடுப்பு வருமா?வராதா?ஐயா அணுகுண்டு,ராக்கெட்டு எல்லாம் ஒங்க டிபார்ட்மென்டுதான் அதையும் நம்ம ஆளுக அரை விலைக்கு வித்தாலும் வித்துப்போடுவாக.பார்தது .

RETURN OF திருமா

பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்தச்சென்ற நமது மாண்புமிகு தொல்.திருமாவளவன் அவர்களை இலங்கை அரசு ஏர்ப்போட்டிலேயே வைத்து மிக மரியாதையுடன் திருப்பி அனுப்பியுள்ளது பண்பாளர் ராசபக்சே அரசு.இது நல்லதுக்குத்தான் ஏன்னா இவர் போய் அஞ்சலி செலுத்துறதுனால என்னா ஆயிறப்போது? அங்க ஈழத்துல இன வேட்டை நடந்தப்ப இவரு நம்ம தற்போதைய சி.எம் கூட சேர்ந்துகிட்டு ஓட்டு பொறுக்கிகிட்டு மன்னிக்கனும் ஒட்டு வேட்டையாடிக்கிட்டு இருந்தாரு.நம்ம தமிழினக்காவலர் இருந்த 3அரை மணிநேர உண்ணாவிரத சாதனையை வேணும்னா இவரு தன்னோட சாதனைன்னு சொல்லிக்கிறலாம்.அதைத்தவிற வேற எதுவும் இவரு பெருசாச் செஞ்சுறல.நான் கூட இவர ஸ்ரீலங்காவுலருந்து பொடனில அடிச்சு பத்திவுட்டதுக்கு நேரா டெல்லிக்கு போய் மீராகுமார்கிட்ட போய் ராஜினாமா லெட்டர் கொடுப்பாருன்னு பார்த்தா இங்க சென்னை யில இலங்கை தூதரகத்துக்கு முன்ன ஒக்காந்துகிட்டு ஆர்பாட்டம் பண்றாராம்.ஆர்பாட்டம்லாம் எப்புடிப்பண்றதுன்னு நம்ம பா.ம.க மகளிரணிகிட்ட பாடம்கத்துக்கங்க மிஸ்டர்.திருமா அட்லீஸ்ட் கொஞ்சம் பப்ளிசிட்டியாவது கிடைக்கும். இவறுக்கு நம்ம மருத்துவர் எவ்வளவோ பரவாயில்ல!அவருபாட்டுக்கு யாருக்கும் பகையில்லாம 30+1 சீட்டு வாங்கிட்டு ஒதுங்கிட்டாரு.இந்த கொழப்பத்துலயும் ஒரே ஒரு நிம்மதி நம்ம தலைவர் அந்த அம்மையாருக்காக இரங்கற்பா பாடாமல் இருந்தது தான்.அந்த அம்மா வாழறப்பதான் நிம்மதியா வாழவிடல!அவங்க இறப்பையும் அரசியலாக்கி அசிங்கப்படுத்த வேண்டாம் !!