Wednesday, February 23, 2011

பச்சையப்பாஸ் பஸ் டே

தற்போது சில வாரங்களாகவே பஸ்டே என்னும் வாசகம் பொதுமக்களால் வெறுப்புடன் உச்சரிக்கப்படுகிறது. இந்த பஸ்டே அல்லது பேருந்து தினம் என்றால் என்ன? இது ஒன்னும் பெரிய கம்பசூத்திரம் ஒன்னும் கெடையாது நம்ம மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம்ல அதே தாத்பரியம் தான்.அதாவது அமெரிக்காவோட THANKS GIVING DAY மாதிரி மாணவர்கள் வருசம் பூரா காலேஜிக்கு நல்லபடியா கூட்டிட்டு வற்ற பஸ்ஸுக்கும் டிரைவர் கண்டக்டர் மற்றும் சகபயணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு பேருந்தை நிர்வாகத்துடன் பேசி அவர்களின் அனுமதியுடன் அதை அலங்கரித்து சக பயணிகள்,மற்றும் பேருந்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதே .ஆனால் இங்கே நடப்பது என்ன?உயர்நீதிமன்றமே போலீஸை அழைத்துக்கண்டிக்கும்படியாக இவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.கடந்த ஒருவார காலமாகவே சென்னையில் இந்த கூத்துக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெறிசல்.மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல மாநகரக்காவலர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து கண்டணக்குரல்களும் வருங்கால இந்தியாவின்தூண்களிடம் இருந்து கேலியும்தான் கிடைத்தது. ஆனால் நேற்று பச்சையப்பன் கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் உச்சகட்ட அசிங்கம்.பஸ்டே எழவைக் கொண்டாடிவிட்டு?பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலபேர் கல்லுரிக்குள் செல்ல மறுத்து போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளனர் காரணம் அவர்களை பஸ்ஸின் டாப்பின் மேல் நின்று ஆடவிட வில்லையாம்.இது அவர்களின் ஜீவாதார உரிமையாம் அவர்களை சமாதானப்படுத்தச்சென்ற பெண்காவல்துறை உயரதிகாரி(D.C.P) மதுபாட்டில்களால் தாக்கப்பட்டு மண்டையுடைக்கப்பட்டுள்ளார்.அவரைப்பாதுகாக்கச்சென்ற பெண் இன்ஸ்பெக்டரையும்,ஆண் காவலர்களையும் தாக்கியுள்ளனர்.அதன்பிறகும் போலீசார் பொறுமைகாத்து மிக லாவகமாக இந்த பிரச்சினையைக் கையாண்டுள்ளனர் ஏன்னா சென்னை உயர்நீதிமன்ற தாக்குதல் சம்பவம் இவர்களுக்கு அனுபவ பாடம் நடத்தியுள்ளது.தேர்தல்கள் நெருங்கி வரும் சமயத்தில் இந்த முன்னெச்சரிக்கை தேவைதான் ஆனா மாணவர்கள் அப்படிங்குற போர்வையில இவனுங்க செய்யிற அழிச்சாட்டியத்துக்கு அழவே இல்லையா. ஏழை வீட்டு புள்ளைக நல்லாபடிக்கனும்னு காலேஜூ கட்டிக்கொடுத்த பச்சையப்ப முதலியார் இவனுகளப்பாத்தா அவரே இந்த காலேஜ இடிச்சுப் போடுவாரு.சென்னையில டிராபிக்ஜாம் கிளியராக எவ்வளவு நேரமாகும்னு எனக்குத்தெரியும் ஆம்புலன்ஸுல சைரனோட போனாவே சாமானியத்துல போகமுடியாது.நடுவுல இவனுக வேற!இந்த லட்சணத்துல பொதுமக்கள் எங்களுக்காக பொருத்துக்கொள்வார்கள் அப்புடின்னு ஒரு சனியன் ஸ்டேட்மெண்ட் கொடுக்குது.இந்த அக்கிரமமெல்லாம் சிங்காரச்சென்னையிலதான் நடக்கும்!!

No comments:

Post a Comment